புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளதாக மத்திய உள்நாட்டு விமான போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்தார்.
விமானப் போக்குவரத்து குறித்த ‘சிறகுகள்- இந்தியா 2022’ என்ற சர்வதேச மாநாடு, ஐதராபாத்தில் நேற்று நடந்தது. மாநாட்டில் மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, மத்திய விமான போக்குவரத்து மற்றும் சாலை போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங், புதுச்சேரி கவர்னர் தமிழிசை, சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டில் மத்திய உள்நாட்டு விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா பேசுகையில், ‘புதுச்சேரி கவர்னரின் வேண்டுகோளை ஏற்று, புதுச்சேரி – ைஹதராபாத் மற்றும் பெங்களூரு இடையிலான விமான சேவை மீண்டும் நாளை 27ம் தேதி தொடங்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கப்படும் விமான சேவை புதுச்சேரியின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்’ என்றார்.
தொடர்ந்து கவர்னர் தமிழிசை பேசுகையில், ‘புதுச்சேரியில் மீண்டும் விமான சேவையை உடன டியாக தொடங்குவதற்கு பிரதமர் மற்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், வரும் 27ம் தேதி புதுச்சேரிக்கு இயக்கப்படும் முதல் விமானத்தில் தான் பயணம் செய்ய இருப்பதாகவும், அதே விமானத்தில் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சரும் புதுச்சேரிக்கு வர வேண்டும்’ என, வேண்டுகோள் விடுத்தார்.
Advertisement