ரூ.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய வணிகவரி & பதிவுத்துறை; இலக்கை கடந்து சாதனை

Tamilnadu records 1 lakh crore revenue: 2021-22 நிதியாண்டில் தமிழகத்தில் வணிக வரித்துறை மற்றும் பதிவுத் துறை இதுவரை இல்லாத அளவுக்கு வருவாயைப் பெற்றுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி பதிவுத் துறை ரூ.13,252.67 கோடி இலக்கு நிர்ணயித்தது. இந்த இலக்கை பதிவுத்துறை மார்ச் 23, 2022 அன்று கடந்துள்ளது. மார்ச் 24 நிலவரப்படி, பதிவுத்துறை ரூ.13,406.51 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.

இதையும் படியுங்கள்: ஸ்டாலினுக்கு BMW கார் துபாய் அரசு வழங்கியதா? உண்மை என்ன?

வணிக வரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 2021-22 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடு ரூ.96,109.66 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு பிப்ரவரி 15-ஆம் தேதி இலக்கை எட்டியுள்ளதாக தெரிவித்தார். மேலும், மார்ச் 24, 2022 நிலவரப்படி, வணிக வரித் துறை 1,00,346.01 கோடி வருவாய் ஈட்டியுள்ளது”, என்றும் அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.