5 மொழிகளில் ரிலீசாகிறது விஜய் நடித்துள்ள பீஸ்ட்…

சன் பிக்ச்ர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் பீஸ்ட்.

இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஏப்ரல் 13ம் தேதி உலகெங்கும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது ‘பீஸ்ட்’.

இந்நிலையில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் திரைப்படம் ஐந்து மொழிகளில் ரிலீசாக இருப்பது அவரது ரசிகர்களிடையே உற்ச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது, தெலுங்கு படத்தை ‘தளபதி 66’ தயாரிப்பாளர் தில் ராஜு, கன்னட பாதிப்பை தீரஜ் எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

வெளிநாட்டு விநியோக உரிமையை ஐங்கரன் நிறுவனம் வாங்கியிருக்கிறது.

ஐந்து இந்திய மொழிகளில் வெளியாக இருக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் விநியோக உரிமை தென் மாநிலங்களில் மட்டுமன்றி வட மாநிலத்திலும் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.