புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதன்படி இந்த பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த 19-ந்தேதி முதல் 25-ந் தேதிக்குள் தினமும் 13 லட்சம் பேர் வீதம் மொத்தம் 92 லட்சத்து 28 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தடுப்பூசி போடப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த 10 நாட்களில் 1 கோடியை எட்டிஉள்ளது. 15வயது முதல் 17 வயதுக்குட்பட்ட 76 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது.