புவனேஸ்வர்: ஒடிசாவில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதாதளம் (பிஜேடி) அபார வெற்றி பெறும் சூழல் உள்ளது. எதிர்க்கட்சியான பாஜக பெரும் முயற்சி செய்து ஒரு சில இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் நிலையில் உள்ளது.
ஒடிசா மாநிலத்தில் 5 கட்டமாக கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. மொத்தம் 851 மாவட்ட ஊராட்சி பதவிகளுக்காக நடந்த தேர்தலில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி அபார வெற்றி பெற்றது. மொத்தம் 786 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 35 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றன.
இதனைத் தொடர்ந்து நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதில் புவனேஸ்வர் உள்ளிட்ட 3 மாநகராட்சிகளுக்கும் 105 நகராட்சிகளுக்கும், பேரூராட்சிகளுக்கும் தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
168 வார்டுகள் நகராட்சி, பேரூராட்சிகளில் 1,731 வார்டுகளுக்கும் நேரடி தேர்தல் நடந்தது. இதில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி அபார வெற்றி பெறும் சூழல் உள்ளது. புவனேஸ்வர் மேயர் தேர்தலில் பிஜேடி வேட்பாளர் சுலோச்சனா தாஸ் 75,152 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். பாஜகவின் சுனிதி முண்ட் 52,988 வாக்குகள் பெற்று 2-ம் இடத்திலும், காங்கிரஸின் மதுஸ்மிதா ஆச்சார்யா 4,080 வாக்குகள் மட்டுமே பெற்று 3-வது இடம் பிடித்துள்ளார்.
மாநகராட்சி வார்டு தேர்தல்:
புவனேஸ்வர், மொத்தம் 67 வார்டுகள்: பிஜேடி- 19, பாஜக- 6, காங்கிரஸ்- 0, மற்றவர்கள்- 4
கட்டாக், மொத்தம் 59 வார்டுகள்: பிஜேடி-25, பாஜக- 3, காங்கிரஸ்-3, மற்றவை -5
பெர்ஹாம்பூர், மொத்தம் 42 வார்டுகள்: பிஜேடி- 30, பாஜக- 7, காங்கிரஸ்-1, மற்றவர்கள்- 4
1,731 இடங்களுக்கான நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர் தேர்தல்
பிஜேடி: 1,164
பாஜக: 282
காங்: 139
மற்றவை: 113