2022 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் போட்டியிலேயே படுமோசமாக சொதப்பி வருகிறது.
2008-ஆம் ஆண்டு தொடங்கிய ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மும்பையில் இன்று தொடங்கியது.
2022- ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.
சென்னை அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஓட்டம் எதுவும் இன்றி ஆட்டமிழந்து சென்னை ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தார். மற்றொரு வீரர் கான்வேயும் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஓரளவு அதிரடி காட்டிய உத்தப்பா 28 ஓட்டங்களில் வருண்சக்கரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். அம்பத்தி ராயுடு 15 ஓட்டங்களில் ரன் அவுட் ஆனார். மறுஒருபக்கம் ஜடேஜா பொறுமையுடன் விளையாடி வந்தார்.
ஷிவம் துபே 3 ஓட்டங்களில் வெளியேறினார்.
7 -வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய தோனி, துவக்கத்தில் மிகவும் மந்தமாக ஆடினார். சென்னை அணியின் ரன்வேகம் ஆமை வேகத்தில் சென்றது.
இருப்பினும் கடைசி கட்ட ஓவர்களில் டோனி அதிரடி காட்டி ரசிகர்களை மகிழ்வித்தார்.
இதனால், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
டோனி 38 பந்துகளில் 50 ஓட்டங்களிலும் ஜடேஜா 28 பந்துகளில் 26 ஓட்டங்களும் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதையடுத்து 132 வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்துவருகிறது.