நிக்கி கல்ராணியை கரம் பிடிக்கிறார் ஆதி…

பிரபல நட்சத்திரங்கள் நிக்கி கல்ராணிக்கும் ஆதிக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இது குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள நிக்கி கல்ராணி “இரண்டாண்டுகளாக காதலித்து வந்த எங்களுக்கு 24.3.2022 அன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றது. குடும்பத்தினர் ஆசியுடன் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் எங்கள் நிச்சயதார்த்தம் நடைபெற்றது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.