தமிழத்தில் ஒத்திவைக்கப்பட்டிருந்த நகர்ப்புற உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மணப்பாறை நகராட்சி மற்றும் குற்றாலம் பேரூராட்சிகளில் மறைமுகத் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மணப்பாறையில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற நகர்மன்ற துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலை திமுகவினர் புறக்கணித்த நிலையில். போதிய கோரம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் இன்று நடைபெற்றது.
இதில், அதிமுகவைச் சேர்ந்த நகர்மன்ற தலைவர் உள்ளிட்ட 10 பேர் மட்டுமே வந்திருந்ததால் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்தல் அலுவலர் மறுப்பு தெரிவித்தார். இதனால் அதிமுகவினர் மற்றும் அதிகாரிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அதேபோல், தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் உள்ள மொத்தம் 8 வார்டுகளில் திமுக 4 மற்றும் அதிமுக 4 என சமபலத்தில் உள்ளது. இந்நிலையில், பேரூராட்சி துணைத் தலைவர் தேர்தலை இரண்டாது முறையாக திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்ததாலும், நேரம் இல்லாத காரணத்தாலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜமனோகரன் அறிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM