கீவ்:
உக்ரைன் மீது ரஷியா இன்று 32-வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. ரஷிய படைகள் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையே, உக்ரைனின் அண்டை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள அமெரிக்க வீரர்கள், நேட்டோ படையில் உள்ள வீரர்கள் மத்தியில் ஜோ பைடன் பேசினார். மேலும், போலந்து வந்துள்ள உக்ரைன் மந்திரிகளுடன் அமெரிக்க அதிபர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், போலந்து நாட்டில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உக்ரைனின் லீவ் நகரில் ரஷியா தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகிறது. ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து அந்த நகரின் ஒருசில பகுதிகளில் வெடிவிபத்துகளும் நடைபெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்…அமெரிக்காவில் 430 அடி உயர ராட்டினத்தில் இருந்து விழுந்து சிறுவன் பலி