டேராடூன்: உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் முதல் பெண் சபாநாயகராக முன்னாள் முதல்வரின் மகள் ரிது கந்தூரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரகாண்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கோத்வார் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரிது காந்தூரி, முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரியின் மகள். இந்நிலையில், இம்மாநில சட்டப்பேரவையில் சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாமல் விலகியது. இதனை தொடர்ந்து போட்டியின்றி ரிது கந்தூரி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பெண் ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். முதல் பெண் சபாநாயகர் ரிதுவுக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.