வட கொரியா மீது பொருளாதார தடை| Dinamalar

நியூயார்க்-‘உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வட கொரியா மீது, கடும் பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும்’ என, ஐ.நா.,விடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. கிழக்காசிய நாடான வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.சமீபத்தில், வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கிலேயே, வட கொரியா நடத்தியதாக கூறப்படுகிறது.இந்நிலையில், ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதர் தாமஸ் கிரீன்பீல்டு கூறுகையில்,”ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விரைவில் கூடி, வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை விதிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்,” என்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.