கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சொத்து தகராறு காரணமாக மூதாட்டியை, உறவுக்கார பெண்ணே அடியாட்களை வைத்து தாக்கி வீட்டை சூறையாடிய சம்பவம் குறித்து அரங்கேறியுள்ளது.
உடையநாச்சி என்ற கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் – லட்சுமி தம்பதியினர் 20 ஆண்டுகளாக அதேப்பகுதியில் குடிசை வீட்டில் தங்கியுள்ள நிலையில், இவர்களுக்கும், இவர்களது உறவினரான மல்லிகா என்பவருக்கும் இடையே ஏற்கனவே நிலம் தொடர்பான சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், லட்சுமி வீட்டில் தனியாக இருந்த போது அடியாட்கள் சிலரை அழைத்து வந்த மல்லிகா, லட்சுமியை தாக்கியதோடு குடிசை வீட்டை சூறையாடி வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் வீடியோ பதிவு செய்துள்ளனர்.
காயமடைந்த லட்சுமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ள நிலையில் இச்சம்பவம் குறித்து வரஞ்சரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.