அரியாங்குப்பம் : நோணாங்குப்பம் பாரடைஸ் பீச்சில் பாராசூட் இயக்குவது தொடர்பாக சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார்.அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் படகு குழாம் மூலம் புதுச்சேரி சுற்றுலாத் துறைக்கு அதிக வருமானம் கிடைத்து வருகிறது. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.சில நேரங்களில் படகு இல்லாமல் சுற்றுலா பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை இருந்து வருகிறது.
சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகளை கவருவதற்கு நோணாங்குப்பம் பாரடைஸ் பீச்சில் பாராசூட் இயக்குவது தொடர்பாக நேற்று மாலை சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கடற்கரை பகுதியில் ஆய்வு செய்தார்.அப்போது சபாநாயகர் செல்வம், கலெக்டர் அருண், அரசு செயலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். கடந்த மாதம் அடித்த சூறாவளி காற்றில் சேமடைந்த கடற்கரையோர பகுதியில் இருந்த குடில்கள், படகு சவாரி செய்ய வரும் பயணிகளின் தங்கும் இடங்கள், படகு நிறுத்தும் ஜெட்டி ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டார்.அருகில் உள்ள புதுக்குப்பம் சான்டைஸ் தனியார் படகு குழாம் போல, நோணாங்குப்பம் படகு குழாமை மேம்படுத்த வேண்டும் என, அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
Advertisement