கீவ் :
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 1 மாதத்தை கடந்து நீடித்து வருகிறது. இந்த போர்க்களத்தில் ரஷியா ஏற்கனவே 6 தளபதிகளை பறிகொடுத்துள்ளது. இந்த நிலையில் 7-வது தளபதி ஒருவரும் கொல்லப்பட்டுள்ளார்.
அவர் லெப்டினன்ட் ஜெனரல் யாகோவ் ரெசான்ட்சேவ் (வயது 48). இவர் 49-வது கூட்டுப்படையின் தளபதி ஆவார்.
உக்ரைனுக்கு ரஷியாவால் 20 படைத்தளபதிகள் அனுப்பப்பட்டதில் 7 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். 13 பேர் மட்டுமே எஞ்சி உள்ளனர். இது ரஷியாவுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
கொல்லப்பட்ட 7-வது தளபதி யாகோவ் ரெசான்ட்சேவ், ரஷிய துருப்புகளிடையே மன உறுதி குறைந்ததால் முன் வரிசையில் நின்று போரிடும் சூழலுக்கு தள்ளப்பட்டு, அதில் அவர் கெர்சன் பிராந்தியத்தில் உள்ள சொர்னோபைவ்கா விமான தளத்தில் உக்ரைன் படைகளால் கொல்லப்பட்டுள்ளார் என்று ஒரு தகவல் கூறுகிறது.
ஆனால் மற்றொரு தகவல், அவர் தனது சொந்தப்படையினராலேயே கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது. இந்த தகவலை ‘தி நேஷனல்’ (அபுதாபி ஆங்கில நாளிதழ்) கூறுகிறது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.