வெளிநாடு செல்வோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி: மத்திய அரசு பரிசீலனை

புதுடெல்லி :

நமது நாட்டில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பேராயுதமாக விளங்குகிறது.

கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தொடங்கிய தடுப்பூசி திட்டம் பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.

60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு கல்வி, வேலை, தொழில், அலுவல் போன்றவற்றின் நிமித்தமாக செல்வோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது பற்றி மத்திய அரசு பரிசீலிக்கிறது. இது தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன.

குறிப்பாக, தனியார் மையங்களில் அவர்கள் பணம் கொடுத்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு வகை செய்யலாமா என்பது பற்றி ஆலோசிக்கப்படுவதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது தொடர்பாக பரிசீலிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளதால் இந்த பரிசீலனைக்கு மத்திய அரசு வந்துள்ளது என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இங்கே திட்டமிட்டபடி சர்வதேச விமான சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்க உள்ளது.

இந்த நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியின் தேவை மற்றும் அது எவ்வாறு இந்தியர்களின் வெளிநாட்டு பயணத்தை பாதிக்கிறது என்பதை கருத்தில் கொண்டு சில நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகளை செய்தி நிறுவனம் ஒன்றிடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் சமீபத்தில் எடுத்துக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்…இலவச ரேஷன் திட்டம் – செப்டம்பர் மாதம் வரை நீட்டித்தது மத்திய அரசு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.