வாஷிங்டன்:
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 32வது நாளாக நீடிக்கும் நிலையில்,
உக்ரைனின் அண்டை நாடான போலாந்துக்கு சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடன், நேட்டோ படை வீரர்கள் மற்றும் உக்ரைன் அமைச்சர்களை சந்தித்தார்.
அப்போது ரஷிய அதிபர் பதவியில் புதின் நீடிக்க முடியாது என்று பைடன் தெரிவித்ததாக அமெரிக்க செய்தி நிறுவனம் கூறியிருந்தது. இது ரஷியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அழைப்பை பைடன் விடுவிக்கிறாரா என்ற கோணத்தில் விவாத பொருளானது.
இந்நிலையில், ஜோ பைடன் பேச்சு குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை அளித்துள்ள விளக்கத்தில், ரஷியாவில் ஆட்சி மாற்றத்தை ஜோ பைடன் விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதின் தனது அண்டை நாடுகள் மீதோ அல்லது அந்த பிராந்தியத்தின் மீது அதிகாரத்தை செலுத்த அனுமதிக்க முடியாது என்ற கருத்தில்தான் அமெரிக்க அதிபர் பேசியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.