சென்னை
தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய் கிரிக்கெட் அணி வீரர் பத்ரிநாத் இளைய கிரிக்கெட் வீரார்களுக்கு இலவா பயிற்சி அளிக்க உள்ளதாக் அறிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான பத்ரிநாத் புகழ்பெற்ற பேட்ஸ்மென் ஆவார். அவர் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பயிற்சியாளராகவும் பணி புரிந்துள்ளார். இவர் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் பத்ரிநாத்.
“நான் டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பயிற்சியாளராக பணியாற்றிய போது தமிழகத்தில் ஏராளமான இளம் வீரர்களிடம் அபார திறமை ஒளிந்து கிடப்பதை அறிய முடிந்தது. இது போன்ற வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை ஏற்படுத்துவதோடு உயர்தர பயிற்சியும் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், ‘ஆன்லைன் டேலண்ட் ஹண்ட்’ என்ற பெயரில் இணைய வழியில் வீரர்களின் திறமையை கண்டறியும் திட்டத்தை தொடங்கியுள்ளேன்.
இத்திட்டத்தில் சேர விரும்புவோர் தங்களது ஆட்டத்திறனை வெளிப்படுத்தும் விதமான வீடியோ பதிவுகளை www.cricitventures.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நானும், எனது பயிற்சியாளர் குழுவினரும் அந்த வீடியோ பதிவுகளைப் பார்த்து, திறமையாள இளம் வீரர்களை கண்டறிவோம். இந்த வீரர்களின் தகுதி, திறமைக்கு ஏற்ப பிரித்து ‘எலைட் குரூப்’ ஒன்று உருவாக்கப்படும்.
இந்த வீரர்கள் எங்களது மேம்படுத்தப்பட்ட பயிற்சி பெறுவதோடு, ஊக்கத்தொகை உதவியும் கிடைக்கும். மேலும் இவர்களுக்கு பெரிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தாலும் ஆச்சரியமில்லை. அதே வேளையில் எலைட் குழுவில் இடம்பெறாத வீரர்களுக்கு வேறு சில பயிற்சிகள் அளித்து செம்மைப்படுத்தப்படுவர்.”
எனத் தெரிவித்துள்ளார்