உக்ரைனில் 7வது ரஷ்ய படைத்தளபதி கொல்லப்பட்ட நிலையில் சொந்த நாட்டு படையினரே அவரை கொலை செய்தார்கள் என்ற அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்தடுத்து உயிரிழக்கும் தளபதிகள்
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சண்டை ஒரு மாதத்தை கடந்து நீடித்து வருகின்றது. இந்த போர்க்களத்தில் ரஷ்யா ஏற்கனவே 6 தளபதிகளை பறிகொடுத்துள்ளது.
இந்த நிலையில் 7-வது தளபதி ஒருவரும் மிகசமீபத்தில் கொல்லப்பட்டார்.
அவர் தான் 49-வது கூட்டுப்படையின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் யாகோவ் ரெசான்ட்சேவ் ஆவார்.
யாகோவின் மரணத்தை தொடர்ந்து ரஷ்யாவுக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பரபரப்பு தகவல்
யாகோவ் ரெசான்ட்சேவ், ரஷிய துருப்புகளிடையே மன உறுதி குறைந்ததால் முன் வரிசையில் நின்று போரிடும் சூழலுக்கு தள்ளப்பட்டு, அதில் அவர் கெர்சன் பிராந்தியத்தில் உள்ள சொர்னோபைவ்கா விமான தளத்தில் உக்ரைன் படைகளால் கொல்லப்பட்டுள்ளார் என்று ஒரு தகவல் கூறுகிறது.
ஆனால் மற்றொரு தகவல், அவர் தனது சொந்தப்படையினராலேயே கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது. இந்த தகவலை ‘தி நேஷனல்’ என்ற அபுதாபி ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.
இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் ரஷ்யாவுக்கு பலத்த பின்னடைவாக பார்க்கப்படுகிறது.