அடிதடி சண்டையில் ஈடுபட்ட ரஜினி..! அதுக்குன்னு இப்படியா ?

சூப்பர்ஸ்டார்
ரஜினி
என்பவர் திரையில் பல வித்தைகள் காட்டினாலும் திரைக்கு பின்னால் மிகவும் சாந்தமான மனிதர். எப்போதும் எளிமையாகவே தோன்றும் ரஜினி அனைவரிடமும் அன்பாகவும், பாசமாகவும் பழகக்கூடியவர். அது திரையுலகை சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி, ரசிகர்களாக இருந்தாலும் சரி.

அவர்களிடையே இன்முகத்துடன் பழகுவார் ரஜினி. ஆனால் ரஜினி ஒரு காலத்தில் முன்கோபம் உடையவராக இருந்தார் என்பது பலரும் அறிந்ததே. சிவாஜி ராவாக இருந்தபோது தன் இளமை காலகட்டத்தில் முன்கோபம் காரணமாக அடிக்கடி சண்டைகளில் ஈடுபட்டுள்ளார் ரஜினி.

விக்னேஷ் சிவனை பிரியும் நயன்தாரா? தவிப்பில் விக்னேஷ் சிவன்..

பின்பு நடிகரானதும் ஒரு சிலரின் வழிகாட்டுதலினால் தன் முன்கோபத்தை விட்டுவிட்டு வேறொரு ஆளாக மாறிப்போனார்.இந்நிலையில் நடிகரான பின்பும் ரஜினி ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்ட தகவல் தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

ரஜினி

பல வருடங்களுக்கு முன்பு அதாவது ரஜினி சூப்பர்ஸ்டாராக உயர்வதற்கு முன்பு ஒருநாள் இளையராஜாவின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டார்.அங்கே பல நட்சத்திரங்களும் வந்திருந்தனர். அப்போது இயக்குனர் பாரதிராஜாவிற்கும் ரஜினிக்கும் கைகலப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன.

பாரதிராஜா
இயக்கிய
சிகப்பு ரோஜாக்கள்
படத்தில்
கமல்
நடித்திருந்தார். அப்படம் மாபெரும் வெற்றிபெற்றது. ஆனால் சிகப்பு ரோஜாக்கள் கதையை முதலில் பாரதிராஜா ரஜினியிடம் தான் சொன்னாராம். ரஜினிக்கும் கதை மிகவும் பிடித்துப்போக இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

பாரதிராஜா

இருப்பினும் பாரதிராஜா ரஜினிக்கு பதிலாக கமலை நடிக்கவைத்தார். இதனால் கடுப்பில் இருந்த ரஜினிக்கும் பாரதிராஜாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றி அடிதடி சண்டையாக மாறியுள்ளது.

இளையராஜா
பிறந்தநாள் விழாவிற்கு வந்த சிலர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். இருப்பினும் இளையராஜாவின் அடுத்த பிறந்தநாள் விழாவிற்கு ரஜினியும் பாரதிராஜாவும் வந்திருந்தனர். மேலும் அவர்களுக்குள் இருந்த பிரச்சனையும் சுமுகமாக பேசித்தீர்க்கப்பட்டு மீண்டும் நண்பர்களானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பேலன்ஸ் செய்த ராஜமௌலி; அரங்கை அதிர வைத்த தாரக், சரண்!

அடுத்த செய்திவிக்னேஷ் சிவனை பிரியும் நயன்தாரா? தவிப்பில் விக்னேஷ் சிவன்..

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.