ஐபிஎல் 2022 தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வியடைந்த நிலையில் அணியின் கேப்டனாக பெயருக்கு தான் ஜடேஜா செயல்பட்டார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
இந்தியாவில் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்று துவங்கியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
வெற்றி பெற்ற கொல்கத்தா அணி
இந்த தொடரில் முதல் முறையாக தோனிக்கு பதிலாக சென்னை அணியின் கேப்டனாக ஜடேஜா பொறுப்பேற்றார்.
இப்போட்டியில் கொல்கத்தா அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் போட தொடங்குவதற்கு முன்பே ஜடேஜாவுக்கு தோனி கிளாஸ் எடுத்து கொண்டு இருந்தார்.இதனைத் தொடர்ந்து 131 என்ற இலக்கை Defend செய்ய போகிறோம் என்ற நெருக்கடியான கட்டத்தில் சிஎஸ்கே மைதானத்துக்குள் நுழைந்தது.
பெயருக்கு தான் கேப்டனா?
அப்போது ஜடேஜா தான் வீரர்களிடையே பேசி தான் கேப்டன் என்று காட்டி கொண்டார். அதன் பிறகு எல்லாம் தோனி கைக்கு தான் சென்றது
சிஎஸ்கே கேப்டன் தோனி தான் என்பது போல், ஃபில்டர்களை நிறுத்துவது, பந்துவீச்சாளர்களை மாற்றுவது என அனைத்தையும் தோனி தான் பார்த்து கொண்டார்.
அதன்படி கிட்டதட்ட பொம்பை கேப்டன் போல் தான் ஜடேஜா செயல்பட்டார். இந்த காட்சிகளை கண்டு வர்ணணையாளர்கள் ஹர்சா போக்லே மற்றும் கவாஸ்கர் கூட கிண்டல் செய்தனர்.