ஜூன் மாதத்தில் கரோனா வைரஸ்4-வது அலைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, வாரம்தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 25 மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன.
50 ஆயிரம் இடங்கள்
இந்நிலையில் 26-வது மெகாகரோனா தடுப்பூசி முகாம் தமிழகம்முழுவதும் 50 ஆயிரம் இடங்களில்நேற்று நடைபெற்றது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாம்களில் சிறார்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக வந்து முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டனர். 26-ம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாமில் 5.92 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிதாக 35 பேருக்கு தொற்று
இதற்கிடையே, தமிழகத்தில் நேற்று ஆண்கள் 18, பெண்கள் 17என மொத்தம் 35 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 12பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
நேற்று மட்டும் 63 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். தமிழகம் முழுவதும் 418 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று முன்தினம் கரோனா பாதிப்பு 35 ஆகவும், சென்னையில் 11 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.