நியூயார்க் : ‘உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா மீது, கடும் பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும்’ என, ஐ.நா.,விடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
வடகொரிய அரசு தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.சமீபத்தில், வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனையை நடத்தியது. இதை அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் நோக்கிலேயே, வடகொரியா நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐ.நா.,வுக்கான அமெரிக்க துாதர் தாமஸ் கிரீன்பீல்டு கூறியதாவது:வடகொரியா, பல நாடுகளின் எதிர்ப்பை மீறி, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதையடுத்து, வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என, ஐ.நா., சபையிடம் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் விரைவில் கூடி, வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை விதிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement