சென்னை:
137 நாட்களுக்குப் பிறகு கடந்த மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது. சமையல் எரிவாயு விலையும் அன்றே உயர்த்தப்பட்டது. அதன்பிறகு தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ரஷிய-உக்ரைன் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.
அந்த வகையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 47 காசுகள் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் 104 ரூபாய்
90 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது.
டீசல் விலை 53 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் டீசல் 95 ரூபாயாக விற்பனையாகிறது.
சென்னையில் கடந்த 6 நாட்களில் 5 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.