29ல் 12 பங்குகள் 100% மேல் லாபம்.. கொட்டிக் கொடுத்த டாடா குழுமம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமங்களில் ஒன்று டாடா குழுமம். இது முன்னணி வணிக குழுமம் என்பதோடு, வாடிக்கையாளர்களின் நம்பகரமான பிராண்டாகவும் இருந்து வருகின்றது. உணவுக்கு பயன்படுத்தும் உப்பு முதல் விலையுயர்ந்த நகைகள், கார்கள் வரையில் வெற்றிகரமாக கோலேச்சி வரும் டாடா, தனக்கென ஒரு தனிப்பாதையில் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டுள்ளது.

இப்படி உள்ள ஒரு டாடா குழும பங்குகளை யாருக்குத் தான் பிடிக்காது. டாடாவின் வணிகம் மட்டும், டாடா குழும பங்குகளும் வாடிக்கையாளர்களையும், முதலீட்டாளர்களையும் பெரும் திருப்தி படுத்தியுள்ளது எனலாம்.

புட்பாண்டா நினைவிருக்கா..? இன்று அதன் நிலைமை என்ன தெரியுமா..?

11 பங்குகள் 100% மேல் ஏற்றம்

11 பங்குகள் 100% மேல் ஏற்றம்

சொல்லப் போனால் டாடா குழும பங்குகள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வரப்படும் பங்குகளாகவும் உள்ளன. டாடா குழுமத்தில் உள்ள 29 பங்குகளில் 11 பங்குகள் நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 100% மேலாக லாபம் கொடுத்துள்ளன.

ராலிஸ் இந்தியாவினை தவிர மற்ற அனைத்து பங்குகளும் நல்ல லாபத்தினையே பதிவு செய்துள்ளன.

சென்செக்ஸ்-ஐ விட 24 பங்குகள் பெட்டர்

சென்செக்ஸ்-ஐ விட 24 பங்குகள் பெட்டர்

இதே 6 பங்குகள் 50 – 70% லாபத்திலும் உள்ளன. இதில் இன்னும் கவனிக்க வேண்டிய சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், டாடா குழுமத்தினை சேர்ந்த 24 பங்குகள், சென்செக்ஸ்-ஐ விட சிறப்பாக செயல்பட்டுள்ளது. இது நடப்பு ஆண்டில் 16% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தககது.

மல்டிபேக்கர் பங்குகள்
 

மல்டிபேக்கர் பங்குகள்

மேலும் நடப்பு நிதியாண்டில் டாடா குழுமத்தியில் 11 பங்குகள் மல்டிபேக்கர் பங்குகளாக உள்ளன. இதே 2021ம் நிதியாண்டில் சுமார் 17 பங்குகள் 100% மேலாக லாபம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தொடர்ந்து கடந்த இரண்டு நிதியாண்டுகளாகவே 6 பங்குகள் 100% மேலாக லாபம் கொடுத்து வருகின்றன.

ஆட்டோமோட்டிவ் ஸ்டாம்பிங்ஸ் & அசெம்பிளிங் லிமிடெட்

ஆட்டோமோட்டிவ் ஸ்டாம்பிங்ஸ் & அசெம்பிளிங் லிமிடெட்

ஆட்டோமோட்டிவ் ஸ்டாம்பிங்ஸ் & அசெம்பிளிங் லிமிடெட் பங்கு விலையானது, நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 1279% ஏற்றம் கண்டிள்ளது. இது கடந்த மார்ச் 31,2021ல் 33.4 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது மார்ச் 24, 2022 அன்று 460.55 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 731 கோடி ரூபாயாக இருக்கும்.

டாடா டெலிசர்வீசஸ்

டாடா டெலிசர்வீசஸ்

டாடா டெலிசர்வீசஸ் (மகாராஷ்டிரா) லிமிடெட் நிறுவனம் நடப்பு நிதியாண்டுல் இதுவரையில் 1033% அதிகரித்துள்ளது. இது கடந்த மார்ச் 31, 2021ல் 14.1 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது மார்ச் 24, 2022ல் 159.75 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பானது 31, 230 ரூபாயாகும்.

நெல்கோ லிமிடெட்

நெல்கோ லிமிடெட்

நெல்கோ லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது நடப்பு நிதியாண்டில் இதுவரையில் 260% ஏற்றத்தில் உள்ளது. இந்த பங்கின் விலையானது மார்ச் 31, 2021ல் 188.6 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச் 24,2022 அன்று 678.6 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் தற்போதைய சந்தை மூலதனம் 1548 கோடி ரூபாயாகும்.

தயோ ரோல்ஸ்

தயோ ரோல்ஸ்

தயோ ரோல்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது நடப்பு நிதியாண்டில் 240% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த மார்ச் 31, 2021ல் 38 ரூபாயில் இருந்து, மார்ச் 34, 2022ல் 129.3 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 133 கோடி ரூபாயாகும்.

டாடா எல்க்ஸி (Tata Elxsi Ltd)

டாடா எல்க்ஸி (Tata Elxsi Ltd)

டாடா எல்க்ஸி நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 182% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த மார்ச் 24, 2022 அன்று 7603.55 ரூபாயாக ஏற்றம் கண்டிருந்தது. இது கடந்த மார்ச் 31, 2021 அன்று 2693.4 ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 47,352 கோடி ரூபாயாகும்.

ஓரியண்டல் ஹோட்டல்ஸ்

ஓரியண்டல் ஹோட்டல்ஸ்

டாடாவின் ஓரியண்டல் ஹோட்டல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது நடப்பு நிதியாண்டில் 163% ஏற்றம் கண்டுள்ளது. இந்த பங்கின் விலையானது மார்ச் 31, 2021 அன்று 22.75 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச், 24, 2022 அன்று 59.75 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 1067 கோடி ரூபாயாகும்.

ஆட்டோமொபைல் கார்ப்பரேஷன்

ஆட்டோமொபைல் கார்ப்பரேஷன்

ஆட்டோமொபைல் கார்ப்பரேஷன் ஆஃப் கோவா லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலையானது, நடப்பு நிதியாண்டில் 143% ஏற்றம் கண்டுள்ளது. இது கடந்த மார்ச் 31, 2021 அன்று 406.9 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச், 24, 2022 அன்று 989.25 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 602 கோடி ரூபாயாகும்.

டின்பிளேட் நிறுவனம்

டின்பிளேட் நிறுவனம்

டின்பிளேட் நிறுவனத்தின் (Tinplate Company Of India Ltd.) பங்கு விலையானது நடப்பு நிதியாண்டில் 141% அதிகரித்துள்ளது. இது கடந்த மார்ச் 31, 2021 அன்று 160.5 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச், 24, 2022 அன்று 387.25 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 4053 கோடி ரூபாயாகும்.

தேஜாஸ் நெட்வொர்க் லிமிடெட்

தேஜாஸ் நெட்வொர்க் லிமிடெட்

தேஜாஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்கு விலையானது நடப்பு நிதியாண்டில் 140% அதிகரித்துள்ளது. இது கடந்த மார்ச் 31, 2021 அன்று 159.25 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச், 24, 2022 அன்று 382.15 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 4378 கோடி ரூபாயாகும்.

ஆர்ட்சன் இன்ஜினியரிங்

ஆர்ட்சன் இன்ஜினியரிங்

ஆர்ட்சன் இன்ஜினியரிங் (Artson Engineering Ltd) நிறுவனத்தின் பங்கு விலையானது நடப்பு நிதியாண்டில் 136% அதிகரித்துள்ளது. இதன் பங்கு விலையானது மார்ச் 31, 2021 அன்று 39.35 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச் 24, 2022 அன்று 92.75 ரூபாயாக இருந்தது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 342 கோடி ரூபாயாகும்.

டாடா பவர்

டாடா பவர்

டாடா பவர் கம்பெனி லிமிடெட் (Tata Power Company Ltd) நிறுவனத்தின் பங்கு விலையானது விலையானது, நடப்பு நிதியாண்டில் 132% அதிகரித்துள்ளது. இதன் பங்கு விலையானது மார்ச் 31, 2021 அன்று 103.2 ரூபாயாக இருந்த நிலையில், மார்ச் 24, 2022 அன்று 239.55 ரூபாயாக இருந்தது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 76,544 கோடி ரூபாயாகும்.

தி இண்டியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட்

தி இண்டியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட்

தி இண்டியன் ஹோட்டல்ஸ் கம்பெனி லிமிடெட் (The Indian Hotels Company Ltd) நிறுவனத்தின் பங்கு விலையானது, நடப்பு நிதியாண்டில் 104% அதிகரித்து, மார்ச் 24, 2022 அன்று 219.1 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே மார்ச் 31, 2021 நிலவரப்படி 107.51 ரூபாயாகைருந்தது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு 28952 கோடி ரூபாயாக உள்ளது.

100% மேல் தொடர் லாபம்

100% மேல் தொடர் லாபம்

ஆட்டோமோட்டிவ் ஸ்டாம்பிங்ஸ் & அசெம்பிளிங் லிமுடெட் – FY2021 -153% – FY 2022- 1279%

டாடா டெலிசர்வீசஸ் – FY2021 -683% – FY 2022- 1033%

டாடா எல்க்ஸி (Tata Elxsi Ltd) – FY2021 -328% – FY 2022- 182%

டின்பிளேட் நிறுவனத்தின் (Tinplate Company Of India Ltd.) – FY2021 -115% – FY 2022- 141%

தேஜாஸ் நெட்வொர்க் லிமிடெட் – FY2021 -401% – FY 2022- 140%

டாடா பவர் கம்பெனி லிமிடெட் – FY2021 – 214% – FY 2022- 132%

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

12 out of 29 Tata group stocks rises over 100% in current financial year, do you have any?

12 out of 29 Tata group stocks rises over 100% in current financial year, do you have any?/29ல் 12 பங்குகள் 100% மேல் லாபம்.. கொட்டிக் கொடுத்த டாடா குழுமம்.. நீங்க வாங்கியிருக்கீங்களா?

Story first published: Sunday, March 27, 2022, 11:39 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.