முகேஷ் அம்பானி ஆசை ஆசையாய் வாங்கி 3 விஷயங்கள்..!

இந்தியாவில் மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக விளங்கும் முகேஷ் அம்பானி-யிடம் இருக்கும் 98 பில்லியன் டாலர் சொத்து மதிப்பிற்கு எதை வேண்டுமானாலும் வாங்க முடியும், ஆனால் முகேஷ் அம்பானி ஆசை ஆசையாய் வாங்கிய 3 முக்கியமான விஷயங்களைத் தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தக விரிவாக்கத்திற்காகப் பல நிறுவனங்களையும், சொத்துக்களை வாங்கியுள்ளது, ஆனால் நாம் இங்கே பார்க்கப்போகிறது முகேஷ் தான் தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் வாங்கியதை தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

சாமானியர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா.. தங்கம் விலை குறையுமா..?

ஆன்டிலியா

ஆன்டிலியா

முகேஷ் அம்பானி மும்பையில் நீண்ட காலமாகத் தனக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்ற கனவு உடன் இருந்தார். இந்நிலையில் பல ஆண்டுகள் முயற்சியில் பல கனவுகளுடன் கட்டப்பட்ட ஒரு வீட்டு தான் இந்த ஆன்டிலியா. உலகிலேயே மிகப்பெரிய மற்றும் மிகவும் காஸ்ட்லியான பிரைவேட் வீடாக விளங்குகிறது ஆன்டிலியா.

சுமார் 27 மாடி, 568 அட உயரம், 4,00,000 சதுரடியில் அமைந்துள்ள இந்தப் பிரம்மாண்ட வீட்டில் 3 ஹெலிப்பேட் உள்ளது. இதுமட்டும் அல்லாமல் 168 கார்கள் நிறுத்தும் அளவிற்கு மிகப்பெரிய கார் கராஜ், 9 ஹைய் ஸ்பீட் லிப்ட், 50 இருக்கைகள் கொண்ட தியேட்டர், நீச்சல் குளம், ஸ்பா, ஹெல்த் சென்டர், கோவில், ஸ்னோ ரூம் எனப் பல ஆடம்பர வசதிகள் உள்ளது.

இந்த வீட்டை Perkins & Will என்ற வெளிநாட்டுக் கட்டிட வடிவமைப்பு நிறுவனம் வடிவமைத்துக் கட்டப்பட்டது. இதன் ஆன்டிலியா வீட்டில் மதிப்பு மட்டும் 2.6 பில்லியன் டாலர் அதாவது 19,835.4 கோடி ரூபாய்.

என்ன ஒரு வாழ்க்கை.. ஒரு நாளாவது இப்படி வாழ வேண்டும்..!

ஸ்டோக் பார்க்
 

ஸ்டோக் பார்க்

இந்த லாக்டவுன் காலத்தில் பல இந்திய பில்லியனர்கள் தங்களது வீட்டைப் பிரிட்டன் நாட்டிற்கு மாற்றினர். இன்னும் சிலர் இந்தியாவில் கொரோனா வேகமாகப் பரவி வந்த போது குடும்பமாகப் பிரிட்டன் நாட்டிற்குக் குடியேறினர். இந்ந நிலையில் முகேஷ் அம்பானியும் தனது குடும்பத்திற்குப் பிரிட்டன் நாட்டில் குறிப்பாக லண்டனுக்கு அருகில் வீட்டை வாங்க வேண்டும் என முடிவு செய்தார்.

இதற்காக முகேஷ் அம்பானி 900 ஆண்டுப் பழமையான மற்றும் பாரம்பரியம் நிறைந்த லண்டன் ஸ்டோக் பார்க் ஹோட்டலை சுமார் 592 கோடி ரூபாய்க்கு வாங்கினார். சுமார் 14 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த ஸ்டோக் பார்க்-ல் 49 பெட்ரூம், 23 ஓட்டைகள் கொண்ட கால்ஃப் கோர்ஸ், 13 டென்னிஸ் கோர்ட், 14 ஏக்கரில் பிரைவேட் கார்டன் ஆகியவை உள்ளது.

தற்போது இந்த ஸ்டோக் பார்க் முகேஷ் அம்பானியின் குடும்பம் தங்குவதற்காகக் கோவில், மருத்துவ வசதிகள், உட்படச் சகவ வசதிகளை உருவாக்கும் பணிகளில் ரிலையன்ஸ் நிறுவனம் ஈட்டுப்பட்டு உள்ளது.

பிரிட்டனில் 2வது ஆன்டிலியா

மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டல் - நியூயார்க்

மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டல் – நியூயார்க்

மன்ஹாட்டன் மிட்டவுனில் உள்ள சென்ட்ரல் பூங்கா-வை பார்க்கும் வகையில் Columbus Circle-ல் 248 அறைகள் உடன் அமைந்துள்ள மிகவும் ஆடம்பரமான ஹோட்டல் விற்பனைக்கு வருகிறது எனத் தெரிந்த உடனே கண்களை மூடிக்கொண்டு முகேஷ் அம்பானி சுமார் 2000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த ஹோட்டலை கைப்பற்றியுள்ளார்.

இந்த ஹோட்டல் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள் தங்கும் பிரபலமானவை என்பதால் லண்டன் ஸ்டோக் பார்க்-ஐ கைப்பற்றி ஒரு வருடம் கூட முழுமையாக முடியாத நிலையில் அதைவிடவும் 4 மடங்கு அதிக முதலீட்டில் நியூயார்க் மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டல்-ஐ வாங்கினார் முகேஷ் அம்பானி.

சீ விண்ட், கஃபே பரேட்

சீ விண்ட், கஃபே பரேட்

முகேஷ் அம்பானி ஆண்டிலியாவுக்குச் செல்வதற்கு முன், முகேஷ் அம்பானியும் அவரது குடும்பத்தினரும் மற்றும் சகோதரர் அனில் அம்பானி மற்றும் அவரது குடும்பத்துடன் கஃபே பரேடில் உள்ள சீ விண்ட் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

முழுக் கட்டிடமும் முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானியால் வாங்கப்பட்டது, மேலும் அம்பானி குடும்பம் அனைவருக்கும் இந்த 17 மாடி குடியிருப்பு இடத்தில் வாழ்ந்தனர். இன்றும் இந்த வீட்டை அம்பானி குடும்பக் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Mukesh Ambani’s most costliest possession from Antilia to Mandarin Oriental Hotel

Mukesh Ambani’s most costliest possession from Antilia to Mandarin Oriental Hotel முகேஷ் அம்பானி ஆசை ஆசையாய் வாங்கி 3 விஷயங்கள்..!

Story first published: Sunday, March 27, 2022, 13:07 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.