பிரதமர் மோடியின் பஞ்சாப் விசிட்; சிறந்த பாதுகாப்பு வழங்கியதாக 14 காவலர்களுக்கு விருது!

கடந்த ஜனவரி மாதம் ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த பிரமாண்டப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வது, அதில் ரூ. 42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது, ஹுசைனிவாலா தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்வது, பிற கட்சிசார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என பல்வேறு திட்டமிடல்களுடன் பிரதமர் மோடி பஞ்சாப் மாநிலத்துக்குச் சென்றார்.

விமான நிலையத்திலிருந்து சாலை வழியாகப் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டருக்கு முன்னால், பிரதமரின் வாகன அணிவகுப்பு மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரர்கள் சிலர் சாலையை மறித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மோடி, பஞ்சாப் விவசாயிகள்

இதனால், மேம்பாலத்தில் சுமார் 15-20 நிமிடங்கள் பிரதமர் காக்க வைக்கப்பட்டிருந்தார். பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட மிகப் பெரிய குறைபாடாக இது கருதப்பட்டது. அதன் பிறகு பிரதமர் மோடி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டு, பாதி வழியிலேயே பதிண்டா விமான நிலையத்துக்குத் திரும்பிச்சென்றார். அப்போது மோடி, “நான் பதிண்டா விமானம் நிலையம் வரை உயிருடன் திரும்பியதற்கு உங்கள் முதல்வரிடம் நன்றி சொன்னேன் என்று கூறுங்கள்” எனக் கூறிவிட்டுப் புறப்பட்டுச்சென்றதாக அப்போது கூறப்பது. இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பஞ்சாப்பில் ஆளும் காங்கிரஸ் அரசு வேண்டும்மென்றெ பிரதமரின் பாதுகாப்பில் கோட்டைவிட்டதாக பாஜக-வினர் குற்றம்சாட்டி போராட்டங்களில் ஈடுபட்டனர். மத்திய அரசும் இது தொடர்பாக பஞ்சாப் அரசிடம் விளக்கம் கேட்டது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 14-ம் தேதி பஞ்சாப்பின், ஜலந்தருக்குச் சென்ற பிரதமர் மோடி, சட்டப்பேரவைத் தேர்தலின்போது தேர்தல் பேரணியில் பங்கேற்றார்.

ஃபெரோஸ்பூர் பாதுகாப்பு மீறல் தொடர்பாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட பஞ்சாப் காவல்துறை, சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் போது ஜலந்தரில், பிரதமர் நரேந்திர மோடி வருகையின் போது எந்தவிதக் குறையும் இல்லாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ததாக 14 காவல்துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கி கௌரவித்திருக்கிறது.

டி.ஜி.பி வி.கே.பாவ்ரா

பஞ்சாப் டி.ஜி.பி வி.கே.பாவ்ரா பிரதமர் வருகையின் போது சிறப்பாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ததாக, ஹோஷியார்பூர் எஸ்.எஸ்.பி த்ருமன் ஹர்ஷத்ரே நிம்பாலே, கபுர்தலா எஸ்.எஸ்.பி தயாமா ஹரீஷ் ஓம்பிரகாஷ், 7-வது பட்டாலியன் கமாண்டர் ராஜ் பால் சிங் சந்து, 27-வது பட்டாலியன் கமாண்டர் ராஜ்பால் சிங் சந்து, 27-வது பட்டாலியன் ஓபிந்தர்ஜித் சிங் குமான், சதின்ஜித் சிங் குமான், ஜி.எஸ்.பி. சிங்ஹர்ஜி. 80-வது பட்டாலியன் கமாண்டர் ஜக்மோகன் சிங். தவிர, ஏ.ஐ.ஜி ஹர்கமல்ப்ரீத் சிங் காக், ஜலந்தர் டி.சி.பி ஜஸ்கித்ரஞ்சித் சிங் தேஜா, ஏ.ஐ.ஜி ராஜேஷ்வர் சிங் சித்து, மஞ்சீத் சிங் தேசி, ஏ.டி.ஜி.பி ஜலந்தர் சுஹைல் காசிம் மிர், டி.எஸ்.பி ராகேஷ் யாதவ், இன்ஸ்பெக்டர் விவேக் சந்தர் ஆகிய 14 காவலர்களுக்கு, விருது வழங்கி கௌரவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.