கடைசி பந்தில் சிக்சர் அடிக்க முயலும் இம்ரான் கான்; தப்பிக்குமா இம்ரானின் நாற்காலி..!!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நாற்காலி ஆட்டம் கண்டுள்ளது. இம்ரான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், மார்ச் 28ம் தேதி வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஆனால் இதற்கு முன்னதாகவே இம்ரான் பதவியை விட்டு விலகலாம் என கூறப்பட்டு வந்த நிலையில்,  இன்னும் சிறிது நேரத்தில் இஸ்லாமாபாத்தில் இம்ரான் கானின் பேரணி நடக்கவுள்ளது.  

 பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது வலிமையை காட்டவும், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளவும் தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.  இதற்கிடையில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷித், இம்ரான் கான் களத்தில், கடைசி பந்து வரை அடித்து விளையாடுவார் என்று கூறியுள்ளார்.

பேரணியில் ராஜினாமா செய்வாரா இம்ரான் கான்?

இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அடுத்த வாரம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது . அதற்கு முன், கடைசி பந்தில் சிக்சர் அடிக்க இம்ரான் கான் முழு முயற்சி எடுத்துள்ளார். இம்ரான் கானின் பேரணி இஸ்லாமாபாத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த பேரணியில் இம்ரான் ராஜினாமா செய்யலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | பாகிஸ்தானில் ஆட்டம் காணும் இம்ரான்கானின் நாற்காலி; விரைவில் ஆட்சி கவிழ்ப்பு?

இம்ரானின் பேரணிக்கு 10 லட்சம் பேர் வரலாம்

இஸ்லாமாபாத்தில் நடைபெறும் பேரணிக்கு 10 லட்சம் பேர் வருவார்கள் என இம்ரான் கான் தரப்பு கூறுகிறது. தெஹ்ரீக்-இ-இன்சாப்பின் நோக்கம் எதிர்க்கட்சிகளுக்கு பலம் காட்டுவதுதான். பேரணியை நிறுத்த எதிர்க்கட்சிகள் களமிறங்கியுள்ளன. இஸ்லாமாபாத் செல்லும் சாலைகளை மூட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மேலும் படிக்க | Pakistan: குரானை அவமதித்ததாக இளைஞர் ஒருவர் கல்லால் அடித்து படுகொலை!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.