சுவிஸ் ஓபன் பாட்மின்டன்: சிந்து சாம்பியன்| Dinamalar

பசல்: சுவிஸ் ஓபன் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.

சுவிட்சர்லாந்தின் பசல் நகரில், சுவிஸ் ஓபன் ‘சூப்பர் 300’ பாட்மின்டன் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சிந்து, தாய்லாந்தின் புசானன் மோதினர். முதல் செட்டை 21-16 எனக் கைப்பற்றிய சிந்து, இரண்டாவது செட்டை 21-8 என வென்றார்.

மொத்தம் 49 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சிந்து 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.