புனேவில் சாலையில் நின்ற ஓலா மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வைரல்.!

மகாராஷ்ட்ரா மாநிலம் புனேவில் சாலையில் நின்ற ஓலா மின்சார ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரியும் வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், சம்பவம் குறித்து விசாரிப்பதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஓலா நிறுவனம் எஸ் ஒன் மற்றும் எஸ் ஒன் ப்ரோ என இரு ரகத்தில் மின்சார ஸ்கூட்டரை வெளியிட்டது. இந்நிலையில் லோஹேகான் நகரில் சாலையில் நின்ற ஓலா எஸ் ஒன் ப்ரோ மின்சார ஸ்கூட்டரில் திடீரென புகை வெளியேறி தீப்பிடித்து எரிந்தது.

சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், வாகனத்தில் ஏற்பட்ட கோளாறுக்கான காரணம் குறித்து விசாரிப்பதாக ஓலா நிறுவனத்தின் தலைமை அதிகாரி பவீஷ் அகர்வால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.