இடாநகர்-அருணாச்சல பிரதேசத்தில் ஒருவரிடமும் புதிய தொற்று பதிவாகவில்லை என்பதால், கொரோனா பாதிப்பில்லா மாநிலமாக மாறி உள்ளது.
வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர் பெமா காண்டு தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.நேற்றைய நிலவரப்படி கொரோனா இல்லாத மாநிலமாக அருணாச்சல் மாறி உள்ளது. இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநிலத்தில் நேற்று முன்தினம் 111 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டதில், ஒருவரிடமும் பாதிப்பு பதிவாகவில்லை.
சிகிச்சையில் இருக்கும் ஒருவரும் விரைவாக குணமடைந்து வருகிறார்.இதனால், கொரோனா இல்லாத மாநிலமாக அருணாச்சல பிரதேசம் மாறிஉள்ளது.ஒட்டுமொத்தமாக இதுவரை 12.68 லட்சம் பரிசோதனைகள் வாயிலாக 64 ஆயிரத்து 484 பேரிடம் பாதிப்பு உறுதியானது. இதில், 64 ஆயிரத்து 188 பேர் குணம்அடைந்தனர்; 296 பேர் பலியாகினர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இடாநகர்-அருணாச்சல பிரதேசத்தில் ஒருவரிடமும் புதிய தொற்று பதிவாகவில்லை என்பதால், கொரோனா பாதிப்பில்லா மாநிலமாக மாறி உள்ளது.nsimg2993566nsimg வட கிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில், முதல்வர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.