கீவ்:
உக்ரைன் அதிபர் வொலாடிமிர் ஜெலன்ஸ்கி நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்த வாரம் துருக்கியில் நடைபெறும் உக்ரேனிய-ரஷிய பேச்சுவார்த்தைகளில் உக்ரைனின் முன்னுரிமைகள் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு ஆகும்.
உண்மையில் தாமதமின்றி நாங்கள் அமைதியை எதிர்பார்க்கிறோம்.
துருக்கியில் நேருக்கு நேர் சந்திப்பதற்கான வாய்ப்பும் தேவையும் உள்ளது. இது மோசமானதல்ல, முடிவைப் பார்ப்போம்.
ரஷியா முற்றுகையிட்ட மரியுபோல் நகரங்களின் மோசமான நிலைமையை நினைவூட்ட மற்ற நாடுகளின் பாராளுமன்றங்களில் நான் தொடர்ந்து முறையிடுவேன்.
உக்ரைனின் ஆயுதப் படையினர் ஆக்கிரமிப்பாளர்களைத் தடுத்து நிறுத்தி வருகின்றனர். மேலும் சில பகுதிகளில் முன்னேறி வருகின்றனர் என்பதால் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்…தென்கொரியாவில் 3.35 லட்சம் பேருக்கு கொரோனா