புட்டேனஹள்ளி : கேரளாவில் இருந்து பெங்களூரு மூலமாக வங்கி கணக்குகளுக்கு ஹவாலா பண பரிமாற்றம் செய்த வழக்கு அமலாக்க துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.பெங்களூரு புட்டேனஹள்ளியில் சில மாதத்துக்கு முன் கேரளாவில் இருந்து பெங்களூரு மூலமாக ஹவாலா பண பரிமாற்றம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விசாரணை நடத்தி பெங்களூரின் ஏ.டி.எம்.,களில் பணம் டெபாசிட் செய்த நான்கு பேரை கடந்த ஆண்டு டிசம்பரில் போலீசார் கைது செய்தனர்.விசாரணையில் ரியாஜ் என்பவர், சூத்ரதாரியாக செயல்பட்டது தெரியவந்தது. நான்கு பேருக்கும் கேரளாவில் இருந்து கூரியரில் பணம் அனுப்புவார்.பின் வாட்ஸ் ஆப்பில் வங்கி கணக்கு எண்களை அனுப்புவார். அந்த வங்கி கணக்குக்கு, இவர்கள் பணம் அனுப்பியது தெரியவந்தது.
இவர்கள் ஆறு மாதத்தில் 3,500க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளுக்கு பண பரிமாற்றம் செய்துள்ளனர். 600 கோடி ரூபாய் வரை பண பரிமாற்றம் நடந்திருக்கலாம் என கூறப்படுகிது. ரியாஜை தேடும் பணி நடக்கிறது.தற்போது இந்த வழக்கை புட்டேனஹள்ளி போலீசார், அமலாக்க துறையினர் வசம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.அவர்கள், வழக்கு சம்பந்தமாக சில தகவல்களை கேட்டு பெற்றுள்ளனர். இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Advertisement