எனக்கு மரணத்தை கண்டு பயமில்லை: எலான் மஸ்க்

வாஷிங்டன்: ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) மற்றும் டெஸ்லா (Tesla) CEO  எலான் மஸ்க் ஒரு நேர்காணலில், கோடீஸ்வரர் மஸ்க் தனது வாழ்க்கை உட்பட பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசினார். 

அதில் அதான் மரணத்தை கண்டு தான் அஞ்சவில்லை என கூறியதோடு, ​​வாழ்க்கை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து தனக்கு கவலையில்லை, ஆனால் வாழும் காலத்தில் தன்னை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்துக் கொள்வதில் தான் கவனம் செலுத்துவதாக கூறினார்.

எலோன் மஸ்க் தனது உடல்நிலையை நன்றாக பராமரிக்க விரும்புவதாகவும், ஆனால் மரணத்திற்கு பயப்படவில்லை என்றும் கூறினார். டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி, ‘நான் இறப்பதைப் பற்றி பயப்படவில்லை. மரணம்  எப்போது வந்தாலும், அது நிம்மதி அளிக்கும் வகையில் வரும் என்று நினைக்கிறேன்.

மேலும் படிக்க | புதிய சோஷியல் மீடியா தளத்தை தொடங்குகிறாரா எலான் மஸ்க்? அவரே கூறிய பதில்

அவரது நீண்ட ஆயுளைப் பற்றி அவரிடம் கேட்டபோது, ​​​​’நாம் நீண்ட காலம் வாழ முயற்சிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. சமூகத்தில், அதிக நாள் வாழ வேண்டும் என நினைப்பதே மன அழுத்தம் ஏற்பட காரணமாக அமையும். ஏனெனில் பெரும்பாலானோர் சிந்தனையை மாற்றுவதில்லை என்பதே உண்மை.  நாம் பழைய யோசனைகளில் சிக்கி இருந்தால், சமூகம் முன்னேறாது என்றார்.

நேர்காணலின் போது, ​​அவர் ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி, விண்வெளி ஆய்வு மற்றும் தனிமை பற்றி பேசினார். ஒவ்வொருவரும் சில சமயங்களில் தனியாக விடப்பட்டதாக உணர்ந்திருப்பார்கள் என்று மஸ்க் கூறினார். அவர் தனது நாயை நினைவு கூர்ந்தார், எனது செல்ல நாய் இல்லாமல் நான் மிகவும் தனிமையாக உணர்கிறேன் என்று கூறினார்.

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி, வயது அதிகமாக உள்ள அரசியல்வாதிகளை விமர்ச்சனம் செய்யும் தொனியில், அமெரிக்காவில்  அரசியலில் சேர குறைந்தபட்ச வயதை நிர்ணயித்துள்ளனர், ஆனால் அதிகபட்ச வயதை நிர்ணயிக்கவில்லை. ஏனென்றால் யாரும் இவ்வளவு காலம் வாழ்வார்கள் என்று அவர்கள் நினைக்கவில்லை போலும் என கூறினார்.

ரஷ்யா – உக்ரைன் போர் விவகாரம் குறித்து பேசிய அவர், ரஷ்யாவை தடுக்க அமெரிக்க அரசு பல முயற்சிகளை செய்துள்ளது. ஆனால் இப்படி உக்ரைனை ரஷ்யா ஆக்கிரமிக்க அனுமதிக்க முடியாது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த ஒரு மாதமாக போர் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதைத் தடுக்க அமெரிக்கா ரஷ்யா மீது பல கடுமையான பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது, ஆனால் அது இதுவரை குறிப்பிடத்தக்க  வகையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை என்றார். 

மேலும் படிக்க | நம்பரை சேமிக்காமல் வாட்ஸ்அப்பில் மெசேஜ் செய்வது எப்படி?

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.