2நாள் பொதுவேலை நிறுத்தம்: இந்த வாரம் 2 நாள் மட்டுமே வங்கிகள் செயல்படும்…

சென்னை: மத்திய அரசுக்கு எதிரான அகில இந்திய தொழிற்சங்க போராட்டத்தில் வங்கி ஊழியர் சங்கங்களும் கலந்துகொண்டுள்ளதால் வங்கிப்பணிகள் முடங்கி உள்ளனர்.  வங்கி ஊழியர்கள் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இந்த வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே வங்கி சேவை செயல்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நாடு தழுவிய 2நாள் வேலை நிறுத்தத்தால், அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் “தொழிலாளர் விரோத, விவசாயி விரோத, மக்கள் விரோத மற்றும் தேச விரோத் கொள்கைகளுக்கு” எதிராக நாடு தழுவிய வேலைநிறுத்தம் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக தொழிலாளர் குறியீடு, தேசிய பணமாக்கல் திட்டம், தனியார் மயம் போன்றவற்றை கைவிடுதல், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட ஊதிய உயர்வு, ஒப்பந்த தொழிலாளர்களை முறைப்படுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றும், நாளையும் (மார்ச் 28, 29)  வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

இந்த வேலைநிறுத்தத்தை   சி.ஐ.டி.யு. ஐ.என்.டி.யு.சி., ஏ.ஐ.டி.யு.சி எல்.பி.எஃப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த இந்திய தொழிற்சங்க கூட்டப்பமைப்பு இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. அமேலும் இந்த வேலை நிறுத்ததில்  அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம், நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளது. பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் அரசின் திட்டம் மற்றும் வங்கி சட்ட திருத்த மசோதா 2021க்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. நிலக்கரி, உருக்கு, எண்ணெய், தொலைத்தொடர்பு, தபால், வருமான வரி, காப்பர், காப்பீடு என பல்வேறு துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.

அதன்படி, இன்று காலை 6 மணி முதல் 30-ம் தேதி காலை 6 மணி வரை நடைபெறும் இந்த 2 நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மார்ச் 28, 29ந்தேதி (திங்கள், செவ்வாய்) வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. தொடர்ந்து  30, 31ம் தேதிகளில் (புதன்,  விழான்) மட்டுமே வங்கிகள் செயல் படும். அடுத்து ஏப்ரல் 1ந்தேதி (வெள்ளிக்கிழமை)  அன்று வங்கிகளின் கணக்கு முடித்தல் காரணமாக அன்று விடுமுறை. ஏப்ரல் 2ந்தேதி (சனிக்கிழமை) தெலுங்கு வருடப்பிறப்பு – விடுமுறை. ஏப்ரல் 3ந்தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. அதனால், இரு நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்படும்.

பல்வேறு ஊழியர் சங்கங்கள் மார்ச் 28 முதல் மார்ச் 29 வரை வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

(IBA) அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA), இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் (BEFI) மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (AIBOA) ஆகியவை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் முடிவைப் பற்றி நோட்டீஸ் அனுப்பியுள்ளன.

நாடு முழுவதும் தொடங்கி உள்ள 2 நாள் வேலை நிறுத்தம் காரணமாக அத்தியவசிய சேவைகள் முடுங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.

தமிழக அரசின் எச்சரிக்கையை மீறி போக்குவரத்து துறையினர் ஸ்டிரைக்! மாணவ மாணவிகள், பொதுமக்கள் கடும் அவதி…

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.