ஸ்ரீநகர்: காஷ்மீரில் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்கும் அமர்நாத் யாத்திரை இந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ம் தேதி தொடங்க உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் யாத்திரை இந்த ஆண்டு 43 நாட்கள் நடக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. காஷ்மீ்ர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் நேற்று நடைபெற்ற அமர்நாத் கோயில் தேவஸ்தான வாரியத்தின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும் வழக்கமான பாரம்பரிய முறைப்படி ரக்க்ஷாபந்தன் தினமான ஜூன் 30-ம் தேதி தொடங் கும் அமர்நாத் யாத்திரை 43 நாட் கள் நடக்கும் என்று துணை நிலை ஆளுநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரி வித்துள்ளது.
– பிடிஐ