21 ஆம் நூற்றாண்டில் பிறந்து ஆஸ்கர் விருதை வென்ற 20 வயதேயான இளம்பெண்

20 வயதேயான பில்லி எலிஷ் “நோ டைம் டூ டை” என்ற திரைப்படத்தில் நடித்தற்காக தனது முதல் ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றார்.

கிராமி விருது பெற்ற 20 வயதேயான பாடகி பில்லி எலிஷ். ஜேம்ஸ் பாண்ட் சீரிஸ் திரைப்படங்களில் ஒன்றாக கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் “நோ டைம் டூ டை”. தனது சகோதரர் பினியஸ் ஒ’கன்னல் உடன் இணைந்து இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார் பில்லி எலிஷ். மிகச்சிறந்த இசைக்காக இந்த படத்தின் இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. ஆஸ்கர் விருதுக்கும் இந்த படம் பரிந்துரை செய்யப்பட்டது.

GLORY (OSCAR WINNER: Best Original Song) - YouTube

இன்று நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த அசல் பாடலுக்கான விருதை இவர்களது “நோ டைம் டூ டை” தட்டிச் சென்றது. இசையமைத்த இருவருக்கும் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டன. 21 ஆம் நூற்றாண்டில் பிறந்து ஆஸ்கர் விருது வென்ற முதல் நபராக மாறியுள்ளார் பில்லி எலிஷ். விருதை வென்றது இருவரும் உணர்ச்சிவசப்பட்டு, அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

Billie Eilish and FINNEAS

பில்லி எலிஷ் “தயாரிப்பாளர் பார்பரா, எம்ஜிஎம் நிறுவனம், இயக்குநர் கேரி ஃபுனாகா. மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி” என்று கூறினார். பினியஸ் “எப்போதும் உத்வேகமாக, எங்களுக்கு ஹீரோக்களாக இருக்கும் எங்கள் பெற்றொருக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம்” என்று தெரித்தார். விருதை வெல்லும் முன், இருவருன் “நோ டைம் டூ டை” படத்தின் ஹிட் பாடலுக்கு மாயஜால நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.