திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் வயநாடு மாவட்ட கலெக்டராக இருப்பவர் கீதா.
இவருக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது ஆர்வம் அதிகம். பள்ளி பருவம் முதல் கல்லூரி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் நடனமாடி உள்ளார்.
கலெக்டர் பொறுப்புக்கு வந்த பின்பும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நடன பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
மேலும் கேரள பாரம்பரிய நடனமான கதகளியையும் கற்று வந்தார். இந்த நிலையில் வயநாடு பகுதியில் உள்ள வள்ளியூர் காவு கோவில் விழாவில் கலெக்டர் கீதாவின் கதகளி நடன அரங்கேற்றம் நடைபெற்றது.
இதில் கலெக்டர் கீதா, தமயந்தி வேடம் அணிந்து நடனமாடினார். அவருடன் ஏனைய கலைஞர்களும் பங்கேற்றனர். இந்த நடனத்தை பார்த்த பக்தர்கள் மற்றும் பெண்கள் கலெக்டரை பாராட்டினர். கலெக்டர் கதகளி நடனம் ஆடும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்… கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு