பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி வழங்கும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் (FD) முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2022 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு மற்ற பிக்சட் டெபாசிட்டை காட்டிலும் அதிக வட்டி கிடைக்கின்றன.
FD திட்டங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI), ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் HDFC வங்கி ஆகியவற்றால் அறிமுகப்படுத்தப்பட்டன. பெருந்தோற்று ஆரம்ப காலத்தில், மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படைப் புள்ளிகள் கூடுதல் சலுகையை இத்தகைய திட்டங்கள் வழங்கின. இருப்பினும், அவை குறுகிய காலத்திற்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில், பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி ஆகியவை, இந்த சிறப்பு பிக்சட் டெபாசிட் திட்டத்தை மார்ச் 31வுடன் நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே கூடுதல் வட்டி பலன் கிடைக்கும். இருப்பினும், திட்டம் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து தகவல் இல்லை.
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி வங்கியில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘HDFC Bank Senior Citizen Care FD’ திட்டத்திந் கீழ் மூத்த குடிமக்களுக்கு 0.25 சதவீதம் கூடுதல் வட்டி கிடைத்தனர். இந்த பிக்சட் டெபாசிட் திட்டங்களின் முதிர்ச்சி காலம் 5 முதல் 10 ஆண்டுகள் வரையில் இருக்கலாம்.
இந்த 0.25 சதவீதம் கூடுதல் வட்டியானது, ஏற்கனவே மூத்த குடிமக்களுக்கு FD திட்டங்களில் வழங்கப்படும் 0.50 சதவீதம் கூடுதல் வட்டியுடன் கூடுதலாக இணைக்கப்படும். அதன்படி, மூத்தகுடிமக்கள் 0.75 சதவீதம் கூடுதல் வட்டி லாபம் கிடைக்கும். எனவே, முதலீட்டாளர்கள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் மட்டுமே பலனை பெற முடியும்.
பேங்க் ஆஃப் பரோடா!
எச்டிஎஃப்சி வங்கியைப் போலவே, பேங்க் ஆஃப் பரோடாவும் மூத்த குடிமக்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் கூடுதல் வட்டி வழங்குகிறது. 5 முதல் 7 ஆண்டுகள் வரை முதிர்ச்சியடையும் FD முதலீடுகளுக்கு கூடுதலாக 0.50 சதவீதம் வட்டி வழங்குகிறது. எனவே, இதில் முதலீடு செய்தால் பிக்சட் டெபாசிட் திட்டத்துக்கு 6.25 சதவீத வட்டி பெறலாம்.