புதுடெல்லி:
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது, பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற் சங்கங்களின் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தம் இன்று காலை தொடங்கியது.
இந்த தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தி.மு.க.மற்றும் இடதுசாரிகளை சேர்ந்த எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக வேலை நிறுத்தம் குறித்து விவாதிக்க கோரி மேல்சபையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்… சுவிஸ் ஓப்பன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பி.வி.சிந்துவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து