இஸ்ரேல் நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதையும் புரட்டிப் போட்டு வருகிறது. ஒமைக்ரான் என்ற பெயரில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனாவின் அடுத்த அலைக்கு காரணமாக அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் சாதாரண பொது மக்கள் முதல் அரசியல்வாதிகள், மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்கள், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், அதிபர்கள், பிரதமர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று, இஸ்ரேல் நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னட்டுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் நஃப்தாலி பென்னட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் வீட்டில் இருந்தவாறு அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவரது உடல் நிலை சீராக உள்ளது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்த 9 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி உத்தரவு!
இதற்கிடையே, இஸ்ரேல் நாட்டு பிரதமர் நஃப்தாலி பென்னட்டின் இந்திய சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக, வரும் ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி,
நஃப்தாலி பென்னட்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளார்.
3 ஆம் தேதி இந்தியா வரும் நஃப்தாலி பென்னட் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட முக்கிய தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு 5 ஆம் தேதி மீண்டும் இஸ்ரேல் திரும்புகிறார். வைரஸ் பாதிப்பில் இருந்து பிரதமர் நஃப்தாலி பென்னட் குணமடைந்தால் திட்டமிட்டபடி அவர் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனக் கூறப்படுகிறது.
அடுத்த செய்திஅடுத்த 9 நாட்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு – அரசு அதிரடி உத்தரவு!