உக்ரைனில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து இர்பென் நகரம் விடுவிக்கப்பட்டு இருப்பதாக அப்பகுதியின் மேயர் ஒலெக்சாண்டர் மார்குசின் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் ஒருமாதத்தை கடந்து இருக்கும் நிலையிலும், போரை நிறுத்துவது தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை.
இந்தநிலையில், தலைநகர் கீவ்விற்கு அருகில் உள்ள உக்ரைனின் முக்கிய நகரான இர்பென் பகுதியை ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து விடுவித்து இருப்பதாக அப்பகுதியின் மேயர் ஒலெக்சாண்டர் மார்குசின் தெரிவித்துள்ளார்.
#Irpen has been liberated from the #Russian invaders – said the mayor. pic.twitter.com/P7OlfeR93C
— NEXTA (@nexta_tv) March 28, 2022
உக்ரைன் மீதான போர் தொடங்கிய ஆரம்பத்தில் இருந்தே, ரஷ்யாவின் தாக்குதலில் அதிகமாக பாதிக்கப்பட்டு பகுதிகளில் தலைநகர் கீவ்விற்கு அருகில் உள்ள இர்பென் நகரமாக முக்கிய பகுதியாக கருதப்பட்டு வந்தது.
இந்நிலையில் இர்பென் நகரை ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து உக்ரைன் பாதுகாப்பு படையினர் விடுவித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இர்பென் நகர மேயர் ஒலெக்சாண்டர் மார்குசின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், உக்ரைனுக்கு இன்று நாங்கள் நல்ல செய்தி வைத்துள்ளளோம், இர்பென் நகரம் ரஷ்ய படைகளிடம் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் எங்களுக்கு தெரியும் இனி இந்த நகரின் மீதான தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் ஆனால் அதனை தைரியமாக எதிர்கொள்ள தயராக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட மேயர்களின் கதி இதுதான்: ஜெலென்ஸ்கி ஆவேச குற்றசாட்டு!