எந்த வேலையிலும் ஈடுபாட்டுடன் செய்யும்போது, அந்த வேலையை மேலும் எளிதாக செய்வதற்கான வழிகளைக் கண்டடைவோம். சமையல் வேலையையும் மிகவும் ஈடுபாடுடன் ரசித்து செய்யும்போது சமையல் வேலைகளை எளிதாகவும் விரைவாகவும் செய்ய வழிகளைக் கண்டடைவோம். அதுமட்டுமல்ல, சமையல் செய்யும்போது சந்திக்கும் சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு எளிதான தீர்வையும் கண்டடைவோம்.
சமையல் வேலை என்பது எளிதான வேலை அல்ல. மனிதன் உயிர்வாழ்வதற்கு காற்று, நீர், உணவு அத்தியாவசியமானது. அத்தியாவசியமான உணவை நன்றாக சமைப்பது என்பது முக்கியமான வேலை. அதனால்தான், சமையல் கலை என்று அழைக்கின்றனர். சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களும் கருவிகளும் நாள்தோறும் புதிதுபுதிதாக சந்தைக்கு வருகின்றன.
சமையல் வேலையை ஈடுபாடுடன் செய்யும் எவரும் சமையலை எளிதாக்கும் சமையலை மேலும் மேம்படுத்தும் சின்னச்சின்ன டிப்ஸ்களைக் கண்டுபிடிக்கவே செய்கிறார்கள்.
பலரும் சமையல் செய்யும்போது, சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி கெட்ச்அப் ஆகியவற்றை சமையலில் பயன்படுத்துவதற்கு தனித் தனியாக கரண்டியைப் (ஸ்பூன்) பயன்படுத்துகின்றனர். இதனால், கூடுதலான கரண்டி வாங்கி வைக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், கவனக் குறைவாக ஒரே கரண்டியை வெவ்வெறு சமையல் பொருட்களை ஒரே நேரத்தில் எடுக்க பயன்படுத்தும்போது, பொருட்கள் கலந்துவிடுவதும் அதனால், சுவை மாறிவிடுவதும் உண்டு. குறிப்பாக திரவ பொருட்களை எடுக்கும்போது, தனித்தனியாக ஸ்பூன் பயன்படுத்த வேண்டி உள்ளது. இந்த சிரமத்தை தவிர்க்க ஒரு சமையல் நிபுணர் ஒரு எளிய தீர்வைக் கண்டுபிடித்து ஒரே ஸ்பூன் போதும் என்று உறுதி அளித்துள்ளார்.
முதலில் ஒரு ஸ்பூனை எடுத்துக்கொள்ளுங்கள். அதில், ஒரு நான்ஸ்டிக் ஸ்பிரேயரை அடியுங்கள். பிறகு, நீங்கள் சமையலுக்கு பயன்படுத்த வேண்டிய பொருள்களை எடுத்து போடுங்கள். நான் ஸ்டிக் ஸ்பிரேயர் அடித்துள்ளதால் அது ஸ்பூனில் ஒட்டாது. பிறகு அதே ஸ்பூனில் இன்னொரு பொருளையும் எடுத்து பயன்படுத்துங்கள். இப்படி, நான்ஸ்டிக் ஸ்பிரே அடித்துவிட்டு ஒரு ஸ்பூனை எல்லாவற்றுக்கும் பயன்படுத்தலாம் ஒட்டவே ஒட்டாது. ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு ஸ்பூன் தேவை இல்லை. ஒரே ஸ்பூன் போதும். உங்கள் வீட்டில் நிறைய ஸ்பூன் இல்லையா, அப்போது ஸ்பூனில் எண்ணெய் தடவி பயன்படுத்தலாம். ஒட்டவே ஒட்டாது. நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். உங்கள் வேலையை ஈசியாக்கிவிடும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“