தெலுங்கானாவில் ரூ.1,800 கோடியில் கட்டப்பட்ட பிரமாண்ட கோயில்

தெலுங்கானா,
தெலுங்கானாவின் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில், லட்சுமி நரசிம்மரின் குடைவரை கோவில் உள்ளது. தலைநகர் ஐதராபாத்தில் இருந்து, 70 கி.மீ., தொலைவில், மலைமேல் அமைந்துள்ள இந்த கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. 

இந்த கோவிலுக்கு அம்மாநில அரசு  ரூ.1,800 கோடி நிதி ஒதுக்கி  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இணையாக மிகவும் பிரமாண்டமான முறையில் புணரமைக்க திட்டமிட்டு கட்டிடப்பணிகள் நடைபெற்றது. 7 கோபுரங்களை கொண்ட இந்த கோவில், ஆத்ம சாஸ்திரங்களை பின்பற்றி 14 ஏக்கர் பரப்பளவில் கோவிலின் திருப்பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளது. 
மிகவும் அழகாகவும், கம்பீரமாகவும் கட்டப்பட்ட கோவிலில் மகா சம்பிரோக்‌ஷனம் கோலாகலமாக நடைபெற்றது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்களை  மேளதாளங்கள், வேதமந்திரங்கள் முழங்க கோவிலின் ராஜகோபுரம், மூலஸ்தானங்களில் உள்ள கோபுரங்களிலும்,  ஊற்றப்பட்டு மகா சம்ப்ரோக்‌ஷனம் நடைபெற்றது. 
விழாவில் கலந்துகொண்ட அம்மாநில முதல் மந்திரி சந்திரசேகரராவ், சிறப்பு பூஜை செய்து சாமிதரிசனம் செய்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.