சுகாதார நிலையங்களில் மருத்துவ சேவை முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தம் புதுப்பிப்பு| Dinamalar

புதுச்சேரி-இரண்டு தனியார் மருத்துவமனைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ சேவை வழங்குவதற்கான ஒப்பந்தம் முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் புதுப்பிக்கப்பட்டது.புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரிகள் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தத்தெடுக்கப்பட்டு, 24 மணி நேரமும் மருத்துவ சிகிச்சை அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.இதன்படி, கனகசெட்டிக்குளத்தில் அமைந்துள்ள பிம்ஸ் மருத்துவக் கல்லூரியானது காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, ஆலங்குப்பம் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரியூரில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனை, அரியூர், வில்லியனுார், ரெட்டியார்பாளையம் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவ சேவையை அளித்து வந்தன.இந்த ஒப்பந்தத்தின் காலக்கெடு முடிவடைந்ததையடுத்து, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் நேற்று புதுப்பித்து வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை செயலர் உதயகுமார், இயக்குநர் ஸ்ரீராமுலு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.