சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய காதலன் கைது செய்யப்பட்டான்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்த முத்துலட்சுமி, கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். அவருக்கும் சேலை வியாபாரியான தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த செல்வத்திற்கும் இடையே முறையற்ற உறவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இருவரும் தேவகோட்டையில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி சேலை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த செல்வம் கழிவறையை சுத்தம் செய்யும் ஆசிட்டை முத்துலட்சுமி முகத்தின் மீது ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பி தலைமறைவாகி விட்டான். இதுதொடர்பாக தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு ஹைதராபாத்தில் பதுங்கி இருந்த செல்வத்தை கைது செய்தனர்.