தமிழக மீனவர்கள் 4 பேரை கைது செய்த இலங்கை கடற்படை.!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. இதற்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டனங்களை தெரிவித்தும், இதை தடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். 

ஆனாலும், ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்களை அவ்வப்போது இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கச்சத்தீவு, தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களை கைது செய்வதோடு, அவர்களின் மீன்பிடி வலைகள் மற்றும் விசைப் படகுகளை இலங்கை கடற்படை பறிமுதல் செய்து வருகிறது.

இந்நிலையில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. விசைப்படகுடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஊர்காவல்துறை துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.