பெங்களூரில் ரூ.8 கோடிக்கு வீடு.. டெக் நகரத்தில் தொழில் முனைவோரின் ஆர்வம்.. ஏன்..!

நாட்டின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கல்யாண் கிருஷ்ணமூர்த்தியுன் மனைவி, செளமியா நாரயணன் பெங்களூரில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு வில்லா ஒன்றை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சிறந்த தொழில் நுட்ப நகரங்களில் ஒன்றாக இருந்து வரும் பெங்களூரில், தொடர்ந்து தொழிலதிபர்கள் ஆடம்பர வீடுகளை வாங்குவது அதிகரித்துள்ளது.

6 நாளில் 5 முறை பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு.. சாமானியர்களை பதம் பார்க்க தொடங்கிய விலையேற்றம்!

செளமியா ஆதர்ஷ் பாம் ரிட்ரீட் வில்லாஸ் (Adarsh Palm Retreat Villas project) திட்டத்தில் இந்த சொகுசு வீட்டினை வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 ஆடம்பர வில்லா

ஆடம்பர வில்லா

பெங்களூரு தொடர்ந்து டெக் ஜாம்பவான்களின் புகலிடமாக மாறி வரும் நிலையில், இந்த ஆதர்ஷ் பாம் ரிட்ரீட் வில்லாவில் 500-க்கும் மேற்பட்ட சிவப்பு கூரையுடன் கூடிய விக்டோரியன் வில்லாக்கள், 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது 80,000 சதுர அடி பரப்பளவைக் கொண்ட கிளப் ஹவுஸில் முழு வசதியுடன் கூடிய உடற்பயிற்சி கூடம், பல்நோக்கு விருந்து, நீச்சல் விருந்து, பூப்பந்து மைதானங்கள் மற்றும் விரிவான உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டு மைதானங்கள் போன்ற நவீன வசதிகளையும் வழங்குகிறது.

என்னென்ன வசதி

என்னென்ன வசதி

இது இன்டெல்லுக்கு பின்னால் உள்ள மாரத்தஹள்ளி புற வழிச் சாலையில் அமைந்துள்ளது. இந்த நவீன சொகுசு வில்லாக்கள், பெங்களூரில் உள்ள தலை சிறந்த பள்ளிகள், ஐடி பூங்காக்கள், மற்றும் பல்வேறு அலுவலகங்கள், உணவகங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், மருத்துவமனைகள் எனப் பல வசதிகளையும் எளிதில் அணுகும் விதத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விருப்பமான குடியிருப்புகள்
 

விருப்பமான குடியிருப்புகள்

மேலும் இது தனிப்பட்ட முறையில் அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழலுடனும் உள்ளது. இது பலருக்கும் விருப்பமான குடியிருப்பாகவும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வில்லாக்கள் 4 படுக்கையறைகள், 3 படுக்கையறைகள், இரண்டு சமையலறைகள் மற்றும் பூஜை ரூம், வாழ்க்கை, உணவு, குடும்பம், மீடியா ரூம்கள் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

விலை நிலவரம் என்ன?

விலை நிலவரம் என்ன?

செளமியா நாரயணன் மட்டும் அல்ல, பல யூனிகார்ன் தொழில் நுட்ப தொழில் முனைவோரும் ஆதர்ஷ் பார்மில் வீடுகளை வாங்கியுள்ளனர். அங்கு வில்லாக்கள் 4.5 கோடி ரூபாய் முதல் 8 கோடி ரூபாய் வரையில் உள்ளன என தரகர்கள் கூறுகின்றனர்.

கடந்த மாதம் ஜெட்வொர்க் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீ நாத் ராமகிருஷ்ணன் இந்த வளாகத்தில் ஒரு வீட்டினை 5.8 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Flipkart CEO kalyan krishnamurthy’s wife buys Rs.8 crore villa in tech city

Flipkart CEO kalyan krishnamurthy’s wife buys Rs.8 crore villa in tech city/பெங்களூரில் ரூ.8 கோடிக்கு வீடு.. டெக் நகரத்தில் தொழில் முனைவோரின் ஆர்வம்.. ஏன்..!

Story first published: Tuesday, March 29, 2022, 8:00 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.