Petrol and Diesel Price: இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை, இன்று பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிாகரித்து ரூ.105.96 க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 67 காசுகள் உயர்ந்து ரூ.96 ஆக உயர்ந்துள்ளது.
Tamilnadu News Update: மத்திய அரசுக்கு எதிராக 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
வங்கிப் பணிகளும் முடக்கின. இரண்டாவது நாளாக பொது வேலை நிறுத்தம் இன்றும் தொடர்கிறது
சென்னை மாநகரை பொறுத்தவரை இன்று 60 சதவீதம் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நாடு திரும்பிய முதல்வர்!
“அதிமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித கப்பல்கள் மட்டுமே.. இப்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”என்று துபாயில் இருந்து சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும், ரூ.6,100 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
மீனவர்கள் சிறைப்பிடிப்பு
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது. விசைப்படகுடன் கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஊர் காவல்துறை துறைமுகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.
ஐ.பி.எல் அப்டேட்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றைய (மார்ச் 28) ஆட்டத்தில் லக்னெள அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைடன்ஸ் அணி வீழ்த்தியது.
India news update: உக்ரைனில் இருந்து போர் காரணமாக நாடு திரும்பிய இந்திய மாணவர்களை தங்கள் கல்வி நிறுவனங்களில் சேர்த்துக் கொள்ள விரும்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
World news update: உக்ரைனில் மரியுபோல் நகரம் போரால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த நகரில் மட்டும் 1.60 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு மாதம் கடந்தும் உக்ரைன்-ரஷ்யாவுக்கு இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
கடலூரில் காதலனுடன் தனிமையில் இருந்த இளம்பெண்ணை வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கிஷோர் (19), சதிஷ் (19), ஆரிப் (18) ஆகிய 3 இளைஞர்களை கைது செய்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கிங்ஷுக் தேவ் சர்மா ஏற்கனவே முன் ஜாமீன் பெற்றிருந்ததால் அவரை அங்குள்ள நீதிமன்றம் விடுவித்தது.