ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் தன்னுடைய காட்சிகள் அதிகமாக எடிட் செய்யப்பட்டு குறைந்த காட்சிகள் படத்தில் இடம்பெற்றதால் ஏற்பட்ட விரக்தியில் நடிகை ஆலியா பட் இயக்குநர் ராஜமவுயை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் ராஜமௌலி இயக்கிய ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் மூலம் பாலிவுட் நடிகை ஆலியா பட் தென்னிந்திய சினிமாற்கு அறிமுகமானார். ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் இறுதிக் கட்டத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட குறைந்த காட்சிகளில் ஆலியா மகிழ்ச்சியடையவில்லை என்று கூறப்படுகிறது. ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் தனது பாத்திரம் அளவுக்கு அதிகமாக எடிட் செய்யப்பட்டதாக அதிருப்தியில் இருக்கிறார் ஆலியா பட். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ‘ஆர்ஆர்ஆர்’ தொடர்பான சில பதிவுகளை நீக்கியதாகத் தெரிகிறது. அலியா பட் இன்ஸ்டாகிராமில் எஸ்.எஸ்.ராஜமௌலியை பின்தொடர்வதையும் நிறுத்தியுள்ளார்.
‘ஆர்ஆர்ஆர்’ வெளியாகும் முன்பு பெரியளவில் விளம்பரப்படுத்தப்பட்டது. இவற்றில் ஆலியா பட், ஒரு பெரிய நிகழ்வைத் தவிர வேறு நிகழ்வு எதிலும் பங்கேற்கவில்லை., ஆர்ஆர்ஆர் விளம்பர பிரச்சாரத்தின் இரண்டாம் கட்டத்தின் போது செயலற்ற நிலையில் இருந்ததையும் ராஜமவுலி ரசிகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உலகளவில் ரூ. 223 கோடியுடன் இந்தியாவின் மிகப் பெரிய ஓபனராக உருவெடுத்தது,. அதன் தொடக்க நாளில் உலகம் முழுவதும் ரூ. 217 கோடி வசூலித்தது. சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவில் அமைக்கப்பட்ட, ‘ஆர்ஆர்ஆர்’, ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம் சரண் ஆகியோரால் சித்தரிக்கப்படும், கொண்டாடப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் இளம் நாட்களின் கற்பனையான படம். இப்படத்தில் சமுத்திரக்கனி, ஒலிவியா மோரிஸ், அலிசன் டூடி மற்றும் ரே ஸ்டீவன்சன் ஆகியோர் நடித்துள்ளனர்.