மாரி செல்வராஜ்
இயக்கத்தில்
உதயநிதி ஸ்டாலின்
நடித்து வரும் படம்
மாமன்னன்
. அந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
வில்லனாக மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிக்கிறார். இந்நிலையில் படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்துவிட்டதாக மாரி செல்வராஜ் ட்வீட் செய்திருக்கிறார்.
#MAAMANNAN First Schedule Wrapped @mari_selvaraj @RedGiantMovies_ @Udhaystalin @KeerthyOfficial @arrahman #Vadivelu #FahadhFaasil @thenieswar @editorselva @kabilanchelliah @kalaignartv_off @MShenbagamoort3 @SonyMusicSouth @teamaimpr pic.twitter.com/qaZKtoV7M5
— Mari Selvaraj (@mari_selvaraj) March 29, 2022
மாமன்னன் படத்தில் நடிப்பதுடன், தன் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார் உதயநிதி ஸ்டாலின். சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வான அவர், மாமன்னன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறார்.
முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்தவே அவர் நடிப்புக்கு முழுக்கு போடுகிறாராம். படங்களில் நடிக்காவிட்டாலும் தொடர்ந்து தயாரிக்கச் செய்வாராம்.
இந்நிலையில் தான் நடிக்கும் கடைசி படத்திற்காக தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அவரின் கெரியரில் இது நிச்சயம் வித்தியாசமான படமாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
மேலும் வில்லாதி வில்லனான ஃபஹத் ஃபாசிலும், உதயநிதியும் மோதிக் கொள்ளும் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.
கமல் ஹாசனின் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார் ஃபஹத் என்பது குறிப்பிடத்தக்கது.
தனுஷ் ஹீரோயின் எல்லி அவ்ரம் யார்னு தெரியுமா?
அடுத்த செய்திபொண்ணுங்க அதை கட்டுப்படுத்த முடியாது.. காண்டம் வாங்குனா என்ன.?: அக்சரா ஹாசன்..!